Thursday, December 23, 2010

காதலுக்கு ஓரு காலம் இருந்தால் ...

காதலில் இறந்த காலம் என்று ஒன்று இருந்திருந்தால் அங்கே காதல் இறந்து இருக்கும்.
எதிர் காலம் என்று ஒன்று இருந்தால் அங்கே காதல் இனித்து இருக்கும்.
காதலில் நிகழ்காலம் மட்டும் என்றுமே புதிராய் இருக்கும்.

Tuesday, December 21, 2010

எது கடினம்

சந்தோசமாக இருப்பது சுலபம் ....
சந்தோசமாக இருக்க முயலுவது கடினம் ...


விவசாயி

நானும் ஓரு விவசாயி தான் . பூப்பது நீயானால் .. என் இதய நிலத்தை ஏற் பூட்டி உழ நான் தயார்.

அத்துணைக்கும் ஆசை படு :-)

புத்தருகே உலகில் உள்ள அத்துணை பேரும் ஆசையை விடவேண்டும் என்ற ஆசை ... இருந்தது அதனால் தான் சொல்கிறேன் அத்துணைக்கும் ஆசை படு :-)


கண்டேன் நல்ல கவிதையை

நல்ல கவிதை எழுத வேண்டும் என்றேன்,
காதலித்து தோற்றுப்பார் பார் என்றான் ஒருவன்.
கண்டேன் நல்ல கவிதையை,
காதலில் இல்லையடி கவிதை,
காலில் இருந்தும் கர்வம் கொண்ட உன் கால் "ஹய் ஹெல்சு செருபினிலும்"

அமெரிக்கா

concrete கூரைகள் கணகிட்ட வாழ்கை!!!இவை அத்துன்னையும் என்நாட்டின் கயிற்று கட்டிலின் உறக்கத்துக்கு ஈடாகுமா !!!




கனாவும் வினாவும்

கண்ட கனாகளுக்கு ... வினா தொடுத்து விடை தெரியாமல் நிற்பதே .. இந்த கணிணி பொறியாளன் ( software engineer ) வாழ்கை !!!

Saturday, January 30, 2010

வருத்த படுவது இல்லை

என் நினைவு நாளை விட
என் நினைவுகள் என்றும் உன் நினைவில் இறுக்கும் என்பதால்
வாழும் நாட்களை எண்ணி வருத்த படுவது இல்லை


Saturday, January 9, 2010

தேவையில்லை எதுவும் எனக்கு

சுவாசிக்க காற்றுதேவை இல்லை..
நேசிக்க நீ இருக்கும் போது...

நேசிக்க ஒரு தேசம் தேவையில்லை
நேசிக்க நீ இருக்கும் போது...

புசிக்க ஒரு உணவும் தேவையில்லை
உன் புன்னகை இருக்கும் போது...

பூஜிக்க ஒரு கடவுளும் தேவையில்லை
நீ என் பக்கம் இருக்கும் போது...

அடியே ! தேவையில்லை எதுவும் எனக்கு
நீயே என் தேவதையாய் இருக்கும் போது...





Wednesday, June 18, 2008

காதலிக்காத யாரோசொல்லிவிட்டு

எண்ணம், சொல், செயல்மூன்றும் ஒன்றாக இருக்கவேண்டுமாம்.காதலிக்காத யாரோசொல்லிவிட்டுப்போய்விட்டார்.
காதலிக்கிறவனுக்கு தானேஅந்த அவஸ்தை புரியும்!
நான் உன்னைக் காதலிக்கிறேன் என்றுதெரியாமலேக் காதலித்துக் கொண்டிருக்கிறேன்.எந்தக் கணத்தில்உன்னைக் காதலிக்க ஆரம்பித்தேன்?எனக்குத் தெரியாது!
உன்னைக் காதலிக்கலாமாஎன்று நினைத்தபோது,காதலித்தால் உன்னைத்தான்காதலிக்க வேண்டும் என்றஎண்ணம் வந்தது எப்படி?எனக்குத் தெரியாது!
காதலைஎண்ணத்திலும்,செயலிலும் நான் வைத்தேன்!சொல்லில் மட்டும் நீ வையேன்!
ஆமாமடி!காதலை நீயே சொல்லிவிடேன்!!ப்ளீஸ்…

Saturday, May 31, 2008

கரகாட்டக்காரன் காமடி தொடருது - சாப்ட்வேர் இஞ்சினியரா

இது நம்ம எல்லோரும் பார்த்து ரசித்த "கரகாட்டக்காரன்" பார்ட்-II(யாரோ முன்னாடியே அரச்சமாவுதான்ங்க - எனக்கு வந்த forwards-ல் படித்து ரசித்தது...)
கவுண்டர்- பிராஜக்ட் மேனஜர்.செந்தில் - டீம் லீட்.கோவை சரளா - சாப்ட்வேர் இஞ்சினியர்.
செந்தில் கோட் (Code) சொல்ல கோவை சரளா டைப் பண்ணுகிறார். பக்கத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர் இருக்கிறார்.

புதுசு: நீங்க சொல்றதையும் மேடம் டைப் பண்ணுவதையும் பார்க்கும் போது. 25 வருஷத்துக்கு முன்னாடியிருந்த நாராயண மூர்த்தியையும், சுதா மூர்த்தியையும் பாக்கற மாதிரியே இருக்கு...
கவுண்ட்ஸ்: ஏய் ஏய்... நாரயண மூர்த்திய நேர்லப் பாத்திருக்கயா?
புதுசு: இல்ல
கவுண்ட்ஸ்: சுதா மூர்த்திய போட்டலயாவது பாத்திருக்கயா?
புதுசு: இல்ல
கவுண்ட்ஸ்: அப்பறம் எதை வச்சிடா இந்த மூஞ்சி நாரயண மூர்த்தி அந்த மூஞ்சி சுதா மூர்த்தினு சொன்ன...ஏய் சொல்லு...
சொல்லு
புதுசு: அவர்தான் இந்த மாதிரி சொன்னா அப்ரைசல்ல எல்லா டாஸ்க்குகும் "A" போட்றன்னு சொன்னாருங்க..அதுவும் அந்த பிராஜக்ட் மேனஜர் காதுல விழற மாதிரி சொல்லுனு சொன்னாருங்க!!!
கவுண்ட்ஸ்: ஓடிப்போ நாயே!!!
(செந்திலைப் பார்த்து): ஏண்டா இப்படி பண்ண?
செந்தில்: ஒரு விளம்பரம்தான்...
கவுண்ட்ஸ்: ஏண்டா!!! இந்த onsiteல இருக்கறவந்தான் இப்படி பில்ட் அப் கொடுக்கறான்!!! நமக்கு எதுக்குட இதெல்லாம்?(சரளாவைப் பார்த்து): அவன்கூட சேர்ந்துகிட்டு நீ என்னடி பெரிய இது மாதிரி?லொல்லு????
கோ.சரளா: தோ!! கொஞ்சம் சும்மா இருக்கீகளா!!! என்னை TCSல கூப்டாகோ, Wiproல கூப்டாகோ, infosysல கூப்டாகோ அங்க எல்லாம் போகமா என் கிரகம் இந்த கூட்டத்துல மாட்டிகிட்டேன்...
கவுண்ட்ஸ்: ஹிம்ம்ம்ம்ம்ம்......ரெட்மாண்ட்ல Microsoft கூப்டாகோ, கலிபோர்னியால Oracleல கூப்டாகோ, நியூ யார்க்ல IBMல கூப்டாகோ.... என்னடி கலர் கலரா ரீல் விடர? இண்டர்வியூல நீ பம்பனது மறந்துபோச்சா?
கோ.சரளா: ஹிக்க்க்க்ம்...இதுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை...
கவுண்ட்ஸ்: ஒழுங்கா ரெண்டு பெரும் வாய மூடிக்கிட்டு வேலையப் பாருங்க!!! இல்லைனா ரெண்டுப் பேத்தையும் வேலைய விட்டு தூக்கிடுவன்! ஜாக்கிரதை!!!
ரெண்டு பேரும் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள்...

என்னவள் - எனக்குள்






என்னவள் - எனக்குள்

சிந்தித்து கொண்டுஇருக்கும் போதே சிந்தைகுள் வந்துவிட்டாய் ; உயிர் போகும் பாதை உணர்த்தி உருகவைத்து விட்டாய் ;இன்று உருகுகிறேன் உனக்காக , உறைய வைக்க வருவாயா ?

Wednesday, November 21, 2007

கால்சட்டை

"யம்மா.. டவுசர் கிழிஞ்சு போச்சும்மா"

பழனி அழுது கொண்டே எதிரில் வரவும் அஞ்சலைக்குக் கோபம் வந்தது. "எப்ப பாரு எதினாச்சும் கேட்டுகிட்டே இருப்பியா.. போவியா"

ஏழெட்டு வீடுகளில் வேலை பார்க்கிறாள் அஞ்சலை. நேற்று பெய்த மழையில் சுத்தமாய் தூக்கம் போனது. விடிகிற நேரம் தன்னை மறந்து கண்ணயர்ந்து விட்டாள். அத்தனை வீடுகளுக்கும் வாசல் தெளித்து.. பாத்திரம் விளக்கி.. மாரியாத்தா.. என்ன பாடு படப் போறேனோ.. புலம்பலுடன் கிளம்பிய போதுதான் பழனியின் அழுகை. ஐந்து வயதாகிவிட்டது. தினசரி எதற்காவது ஒரு அழுகை. இது வேண்டும்.. அது வேண்டுமென்று. இன்னொருத்தி பின்னால் கணவன் போனபின்பு வயிற்றைக் கழுவுவதே பெரும்பாடாக இருக்கிறது. மேலே வந்து விழுந்தவனைத் தள்ளி விட்டு வேகமாக நடை போட்டாள்.

"விடிஞ்சு எவ்வளவு நேரமாச்சு.. இப்பதான் வாசத் தெளிக்கிறதா"

"மழை பெஞ்சிருக்கா.. கூட்டி விட்டா போதும்மா. இதா இப்ப கோலம் போட்டுருவேன்"

வாசல் தெளித்து.. பாத்திரம் விளக்கி.. துவைத்து.. எல்லா வேலைகளையும் முடித்தாகி விட்டது.

"அஞ்சலை.. பழைய துணிமணி சேர்ந்து போச்சு.. பக்கெட் வாங்கலாம்னு பார்க்கறேன்.. தெருவுல இப்ப வரலே.. உனக்குத் தெரியுமா யாரையாச்சும்.."

குவிந்திருந்த துணிகளைப் பார்த்தாள். " அட.. நம்ம சதீசுது இருக்குதே.. ஏம்மா சின்னதாப் போச்சா?"

"போன வருஷம் தெச்சது.. பாரு அப்படியே புதுசா இருக்கு.. போட முடியலேங்கிறான்"

அஞ்சலை குரலைத் தழைத்துக் கொண்டாள். "ஏம்மா.. இதை எம்புள்ளைக்கு எடுத்துக்கவா.. ?"

சம்மதமாய்த் தலையாட்டியதும் அஞ்சலைக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. பாவம்.. புள்ளை அழுதுகிட்டே இருந்திருப்பான். போனதும் 'இந்தாடா.. புது டவுசர்'னு நீட்டினா குஷியாயிடுவான்.

இருட்டிய பிறகுதான் வீட்டுக்குப் போனாள். பழனி அஞ்சலையைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டான். 'அவன் அப்பனை மாதிரியே கொணம்'

" இந்தாடா"

டவுசரையும் சட்டையையும் பார்த்ததும் பழனியின் முகம் பெரிதாக மலர்ந்தது. உடனேயே போட்டுப் பார்த்தான்.

'அய்.. நல்லா இருக்கு..'

அஞ்சலை மனசும் மலர்ந்து போனது. 'சதீசு மாதிரியே இருக்கான்..'

அடுத்த நிமிடம் பழனி அழ ஆரம்பித்தான்.

"என்னடா.. " அஞ்சலைக்கு எரிச்சல்.

"ஏம்மா என்னிய இஸ்கூல்ல போடலே.. இதே சட்டையை போட்டுக்கிட்டு எல்லாப் பசங்களும் போறாங்க.. நா மட்டும் வூட்டுல கிடக்கேன்." பழனியின் அழுகை பெரிதானது.

அஞ்சலைக்குத் என்ன சொல்வதென்று புரியவில்லை.

Friday, November 2, 2007

தமிழச்சி

ஈசிச் சேரில் சாய்ந்தவாறு பேப்பர் படிப்பது போலப் பாவனை பண்ணிக்கொண்டிருந்தார் தமிழரசு. ஆனால் அவர் கவனமெல்லாம் தூணுக்குப் பின் பதுங்கிக் கொண்டு தன் பெரிய கருவண்டுக் கண்களில் பயமும் ஆர்வமும் கலந்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அச்சிறு பெண்ணின் மேல்தான் இருந்தது.

நெல்மணி மூக்கும், கொழுவிய கன்னங்களும், துறுதுறுவென்ற கண்களும், பட்டுப்பாவடை உடுத்திய பாங்கும் அவருக்குத் தன் மகளே சிறு வயதுத் தோற்றத்தில் கண்ணெதிரே வந்து விட்டாற்போல் பிரமை ஏற்பட்டது. சோகை வெளுப்பாக இல்லாமல் சற்றே ரோஜா கலந்து விட்ட பாலின் நிறமும், மென்மையான செம்பட்டை முடியும் மட்டும்தான் அவளின் தந்தையை அடையாளம் காட்டின. சுற்றும் முற்றும் பார்த்து யாரும் இல்லையென்று உறுதிப்படுத்திக் கொண்டு "இங்கே வா!" என்று அழைத்தார். அதற்காகவே காத்திருந்தாற்போல ஓடி வந்து மடியில் விழுந்தாள். "உன் பெயரென்ன?" என்று ஆங்கிலத்தில் வினவினார். ஒரு சின்னச் சிரிப்புடன் "உங்கள் பெயரில் பாதிதான்" என்று சுத்தத் தமிழில் குறும்பு தொனிக்கக் கூறினாள். ஒரு கணம் ஆச்சரியப்பட்டார். "ஆமாம் தாத்தா! 'தமிழ்' உங்க பெயரில் பாதிதானே! அதுதான் என் பெயர்" சொல்லி விட்டு ஒரு 'களுக்' சிரிப்பு! அது அவரையும் தொற்றிக் கொண்டது. அவரது நினைவுகள் அவர் மகளைச் சுற்றிச் சுழன்றன.

பசுமை நிறைந்த பொன்வயல் கிராமத்திற்கு விரும்பித் தலைமையாசிரியராய் மாற்றல் பெற்று வந்தார் தமிழரசு. அவருக்கு ஏற்கெனவே முன்னோர் விட்டுச் சென்ற சொத்து இருந்தது. அதனால் பெரிய பள்ளியில் வேலை, பள்ளி முடிந்ததும் டியூஷன் மூலம் அதிக வருமானம் என்றெல்லாம் யோசிக்காமல் முழு மனதுடன் கிராமத்திற்கு வர முடிந்தது. பொன்வயல் ஒரு நடுத்தர கிராமம். நகரத்தில் இருக்கும் அடிப்படைத் தேவைகள் இருந்தாலும் மக்கள் மனதில் மாசு படியாமல் இருந்தனர். 'தமிழ் வாத்தியார்' என்று அவரை மரியாதையாய் அழைத்து எல்லா உதவிகளையும் செய்தனர். அவரது மனைவி பத்மாவுக்கும் கிராமத்து வாழ்க்கை பிடித்தமானதாகவே இருந்தது. அவ்விருவரும் மனமொத்து வாழ்ந்ததன் பயனாய் வெண்ணிலா பிறந்தாள்.

'வெண்ணிலா' பெயருக்கேற்றாற்போல் கண்களுக்கும் கருத்துக்கும் குளுமை தரக்கூடிய அழகும், குணமும் மிகுந்தவள். அவர் தலைமையாசிரியராய் இருந்த பள்ளியில் 10ம் வகுப்பு வரைதான் இருந்தது. அதனால் பள்ளி இறுதி மற்றும் கல்லூரிப் படிப்பிற்கு திருச்சியில் விடுதியில் சேர்த்துப் படிக்க வைத்தார். அப்பாவின் தமிழார்வம் அவளையும் தொற்றிக் கொண்டதில் பட்டப்படிப்பிலும் தமிழை சிறப்புப் பாடமாய் எடுத்துப் படித்தாள். அதில் அவருக்குப் பெருமையும் கூட. ஒவ்வொரு விடுமுறைக்கு வீட்டிற்கு வரும்போதும் அப்பாவும் மகளும் தமிழிலக்கியம், திருப்பாவை, திருவாய்மொழி, புற நானூறு, அக நானூறு, மரபுக்கவிதை, புதுக்கவிதை எதையும் விட்டு வைக்காமல் அலசிக் காய வைத்து விடுவார்கள். தனக்கு வரும் மருமகனும் தமிழார்வம் மிகுந்தவனாக இருக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. பட்டப் படிப்பு முடிந்ததும் அவளுக்குக் கல்யாணம் செய்து விட வேண்டும் என்று அப்போதே மாப்பிள்ளை தேட ஆரம்பித்திருந்தார்.

அந்த வருடம் கல்லூரியில் கடைசி வருடம். பரீட்சை முடிந்து ஊருக்கு வரும்போது தன்னுடன் பயிலும் ஜோசப் என்ற வெளி நாட்டு மாணவனை உடன் அழைத்து வந்திருந்தாள் வெண்ணிலா. கிராமத்து வாழ்க்கையை சிறிது காலம் அனுபவிக்க வேண்டுமென்பதாலும், தமிழ் மீது இருக்கும் ஆர்வத்தால் அவரைப் பார்த்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ளவேண்டுமென்று ஆசைப்பட்டதாலும் அழைத்து வந்ததாகக் கூறினாள். தமிழ் மீது பற்று வைத்த ஒரு வெளி நாட்டு மாணவனை சந்தித்ததில் அவருக்கும் நிரம்பவே மகிழ்ச்சி! சுமார் ஒரு மாதம் அவர்கள் வீட்டிலேயே தங்கி இருந்து எல்லோர் மனதையும் கவரும் வண்ணம் கண்ணியமாக நடந்து கொண்டான் ஜோசப். அந்த ஒரு மாதத்தில் தமிழ் பற்றி ஆராய்ச்சி நூல் எழுதும் அளவுக்கு நிறைய விஷயங்களைப் பேசித் தீர்த்தனர். தமிழ் மீது ஜோசப்பிற்கு இருந்த காதல் தமிழரசுவைக் கவர்ந்தது.

கடைசியாக ஊருக்குக் கிளம்ப ஒரு வாரம் இருக்கும்போது இருவருமாய் ஒரு நாள் அவர் முன் வந்து தயங்கித் தயங்கி நின்றனர்.

'என்னம்மா, இன்னும் நீங்க பார்க்காத இடம் ஏதாவது இருக்கா என்ன? எங்கயாவது போகணுமா?' என்றார்.

'ஆமாம்பா! அது வந்து....' தயங்கி இழுத்தாள் மகள். நான் ஜோசப்போட மனைவியா அவரோட நாட்டுக்குப் போக விரும்பறேம்பா!'

'என்ன?! இதை நான் உங்கிட்ட இருந்து கொஞ்சமும் எதிர் பார்க்கவேயில்லை வெண்ணிலா.' அழுத்தத்தோடு வந்தது அவர் குரல். 'உனக்குக் குடுத்த சுதந்திரத்தை நீ பயன்படுத்திய லட்சணம் இதுதானா? உன் மேல நாங்க வைச்ச நம்பிக்கைக்கு இவ்வளவுதான் மதிப்பா? நான் யார் தெரியுமா? தமிழ் மீது பற்றுக் கொண்டு தமிழை வளர்க்கப் பாடு பட்டுக் கொண்டிருக்கும் தமிழாசிரியர். எனக்கு வரப்போகும் மருமகனும் என்னை மாதிரியே இருக்கணும்னு முடிவு பண்ணி இருக்கேன். ஏம்பா ஜோசப்! உன் மேல எவ்வளவு பாசமும் நம்பிக்கையும் வெச்சிருந்தா உங்களை தவறா நினைக்காமல் பழக விட்டிருப்பேன். இப்படி கண்ணியக்குறைவா நடந்துகிட்டியே! இதுதான் உன் பண்பாடா?' என்று அவனையும் கத்தித் தீர்த்தார்.

'ஐயா! நீங்க என் மேல் வெச்சிருக்கும் நம்பிக்கை குறையற மாதிரியோ கண்ணியக் குறைவாகவோ நாங்கள் ஒரு நாளும் நடந்துகிட்டதில்லை. தமிழை நான் நேசிக்கற அளவுக்கு வெண்ணிலாவையும் நேசிக்கறேன். அவளோட சேர்ந்த என் வாழ்க்கை முழுமை பெறும், அர்த்தமுள்ளதா இருக்கும்னு நம்பறேன். தயவு செய்து பெரிய மனது பண்ணி எங்களை ஆசிர்வதிக்கணும்' என்றவாறு மிகுந்த பணிவோடும்,அமைதியோடும் காலில் விழப் போனவனை சற்றும் மதியாமல் வாயில் வந்தபடி ஏசினார்.

முடிவில் ஜோசப்பும் வெண்ணிலாவும் அந்த வீட்டை விட்டு வெளியேறி அந்த ஊர்க்கோவிலிலேயே மாலை மாற்றித் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் சென்னை சென்று திருமணத்தைப் பதிவு செய்து கொண்டு முதலில் ஜோசப் தன் நாட்டுக்குப் பயணமானான். விசா வரும்வரை ஒரு விடுதியில் தங்கியிருந்த வெண்ணிலாவை விரைவிலேயே தன்னிடம் அழைத்துக் கொண்டான்.

இப்போது ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இருவரும் தங்கள் நான்கு வயது மகளுடன் மறுபடி அந்தக் கிராமத்துக்குள் காலடி எடுத்து வைத்திருக்கின்றனர். இத்தனை ஆண்டுகளில் அவர்கள் எழுதிய உருக்கமான கடிதங்கள் எல்லாம் படித்துப் பார்க்காமலே குப்பைத் தொட்டிக்குப் போய்க் கொண்டிருந்தன. மனம் பொறுக்காமல் நேரில் சென்று சமாதானப்படுத்தி விடும் முடிவோடு வந்திருந்தனர். ஆனால் தமிழரசுவின் கோபம் இன்னும் தீராமலே இருந்தது. எப்படியாவது அவரது கோபத்தைத் தணித்து மறுபடி உறவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டுமென்ற முடிவோடு வந்திருந்தத மகளுக்கு, அவளின் தாய் தன் கணவருக்குத் தெரியாமல் உதவிகள் செய்துவந்தார். எதிர் வீட்டிலேயே அவர்களுக்குத்தங்க ஏற்பாடு செய்ததோடு, தினமும் மகளையும், பேத்தியையும் பார்த்துப் பேசி மகிழ்ந்தார். ஜோசப்பும் குணம் மாறாமல் அன்போடும், மரியாதையோடும் இருந்தது அவருக்கு நிம்மதி அளித்தது. அன்று தமிழரசு பள்ளி விஷயமாக டவுன் வரை சென்றிருந்த தைரியத்தில் வெண்ணிலாவும் அவள் தாயும் கோவிலுக்குச் சென்றிருந்தனர். தமிழ் அவள் தந்தையோடு விளையாடிக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் ஜோசப் தூங்கியவுடன் மெதுவாக நழுவி எதிர் வீட்டுக்கு வந்து விட்டாள்.

திடீரென்று கன்னத்தில் ஈரத்தை உணர்ந்து நிகழ்காலத்துக்குத் திரும்பினார் தமிழரசு! குழந்தை தமிழ்தான் அவர் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். அந்தப் பாசத்தில் தடுமாறிப்போனார். 'நான் யாருன்னு தெரியுமா உனக்கு?' மறுபடியும் ஒரு 'களுக்'! ஓ!! தெரியுமே அம்மாவும் அப்பாவும் எப்பவுமே உங்க போட்டோவும், பாட்டி போட்டோவும் காட்டி உங்களைப் பத்தி சொல்லுவாங்க. அம்மா மேல உங்களுக்கு ரொம்ப ஆசைன்னு சொல்லுவாங்க! ஆனா.... நீங்க அம்மா கிட்டயும் அப்பா கிட்டயும் பேசவே இல்லையே ஆசையா இருந்தா அப்படியா இருப்பாங்க? என்னால எங்க அம்மா அப்பா கிட்ட பேசாம ஒரு நாள் கூட இருக்க முடியாது தெரியுமா?'

குழந்தையின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திகைத்துப் போனார் தமிழரசு. பேச்சை மாற்றும் முயற்சியாக 'அதென்ன கையில ஆல்பம்?' என்றார். 'உங்களுக்கு காட்டத்தான் அப்பா தூங்கினதும் எடுத்துட்டு வந்துட்டேன்' ஒரு ரகசிய சிரிப்பு சிரித்தாள். இது எங்க அப்பாவுக்கு அவர் எழுதின புக்ஸ் நல்லா இருக்குன்னு பாராட்டி 'சிறந்த தமிழ்த்தொண்டர்'னு ப்ரைஸ் குடுத்தப்போ எடுத்த போட்டோஸ் . வீடியோ காசட் கூட இருக்கே. அதுல அப்பா உங்களைப் பத்தி தான் நெறய பேசினாங்க. நான் கூடப் போயிருந்தேனே! எவ்ளோ பேர் கை தட்டினாங்க தெரியுமா?' எந்த நாட்டில் இருந்தாலும் குழந்தையின் குதூகலம் ஒரே மாதிரிதான் போலும். பட படவெனப் பொரிந்தாள். அவர் கையில் ஆல்பத்தையும் திணித்தாள்.

'பாருங்க தாத்தா! உங்களுக்குதான் எடுத்து வந்தேன்' என்று ஒவ்வொரு படமாகக் காட்டி அவளுக்குத் தெரிந்த வரை விளக்கிக் கொண்டிருந்தாள். அந்த ஆல்பத்திலேயே அதை எடுத்த தேதி நிகழ்ச்சி எல்லாம் ஒவ்வொரு புகைப்படத்தின் கீழும் எழுதி இருந்ததால் அவருக்கு அதிகம் விளக்கம் தேவைப்படவில்லை. சிறந்த தமிழாராய்ச்சி நூல் எழுதியதற்காகவும் தமிழ்ச் சங்கத்தை நல்ல முறையில் நடத்தி வருவதற்காகவும் ஜோசப்பை 'சிறந்த தமிழ்த் தொண்டனாய்' அங்கீகரித்து பட்டமளித்த விழாவின் தொகுப்பு அது. எல்லாவற்றிற்கும் மேலாக ஜோசப்பிற்கு பரிசாகக் கிடைத்த பணத்தில் 'தமிழரசு ஸ்காலர்ஷிப்' அமைத்து தமிழாராய்ச்சி மாணவர்களுக்கு உதவி செய்யப்போவதாய் எழுதியிருந்ததைப் படித்ததும் அவருக்கு கண்கள் பனித்தன... தன் பெயரில் ஸ்காலர்ஷிப் ஆரம்பித்ததற்காய் அல்ல! தமிழின் வளர்ச்சிக்கு வெளி நாட்டில் கிடைத்த வரவேற்புக்காய்.

'தமிழை நாம வளர்க்கறதா சொல்றது பிரமை, ஒரு வித கர்வம். உண்மையில் அது தானே வளர்ந்து செழிக்கும் மத்தவங்களையும் வாழ வைக்கும்' ஐந்து வருடத்திற்கு முந்தைய வாக்குவாதத்தின்போது மகள் சொன்னது இப்போது அவருக்குப் புரிந்தது!

கோவிலுக்குப்போன தாயும் மகளும் திரும்பி வந்து அவர்களுக்கு முன்னதாகவே தமிழரசு திரும்பிவிட்டதை கவனித்துப் பயந்து போயினர். போதாக்குறைக்கு தமிழின் குரல் வேறு வாசல் கடந்து அவர்களைத் தீண்டியதில் என்ன புயல் வீசுமோ எனப் பயந்து கொண்டே எட்டிப் பார்த்தனர். ஆனால் அவர்கள் கண்டதோ தமிழும் தமிழும் கொஞ்சி விளையாடிய அழகான காட்சி!

சாப்ட்வேர் இஞ்சினியருங்க வாங்கற சம்பளமெல்லாம் !!!

கற்றது தமிழ் படம்பாக்கலைனாலும் அதை பற்றி படித்த விமர்சனங்கள்மென்பொருள் துறையினரை சாடுவதாக தெரிகிறது. இன்னைக்கு விலைவாசி ஏறனதுக்கு சாப்ட்வேர் இஞ்சினியர்கள் தான்காரணம்னு நிறைய பேர்சொல்லி கேட்டிருக்கேன். ஒரு வகைலஅது உண்மையும் கூட.

மெட்ராஸ்ல இருந்து திருச்சி போகறதுக்கு ஏர் பஸ்லபோகலாம்னு போய்விசாரிச்சிருக்கான். ஒரு சீட்தான்இருக்குனு சொல்லியிருக்காங்க. அதே சமயம் ஒரு சாப்ட்வேர் இஞ்சினியரும்அங்கவந்திருக்கான். உடனேபஸ் கண்டக்டர் (ஏர் பஸ்லஇருக்கறவர் பேருகண்சக்டரா இல்லை க்ளீனரா?) 100 ரூபாய் அதிகமா சொல்லியிருக்கான். உடனேஎன் அண்ணன் சாதாரண பஸ்லபோனாஅந்த100 ரூபாய்க்கு திருச்சிக்கேபோயிடலாம்னு ஏர் பஸ்லபோகாம சாதாரண பஸ்லயே போயிருக்கான். நம்மஆளு (சாப்ட்வேர் தான்) நூறுரூபாஅதிகமா செலவு பண்ணி ஏர் பஸ்லபோயிருக்கான்.

இந்த இடத்துல தப்பு யார்மேலனு எனக்கு தெரியல. ஏமாந்தவன் ஒருத்தன் வரான், நூறுரூபாய் ஏத்தி சொன்னாலும் சேர்த்து வாங்குவானு சொன்ன அந்தபஸ்காரன் மேல ஏங்கயாருமே தப்பு சொல்ல மாட்றீங்க? ஏமாத்தறவனைவிட ஏமாறவன் மேல ஏன் உங்களுக்கு எல்லாம் இந்தகோபம்? யாரும் விருப்பட்டு ஏமாறதில்லைங்க.

பெங்களூர்ல வீட்டு வாடகை ஏறிடுச்சினு எல்லாரும் சாப்ட்வேர் இஞ்சினியரை திட்றாங்க. ஆனா தலைக்கு ரெண்டாயிரம். நாலுபேர்தங்கினா எட்டாயிரம், இன்னொருத்தவன் வந்தா பத்தாயிரம்னுசொல்ற வீட்டு ஓனருங்க மேல ஏன் உங்ககோபம் போகலை? இன்ஃபோஸிஸ் இருபத்தைந்தாம் ஆண்டு விழாக்கு போனஸ்னு தராங்கனு சொன்னவுடனே பெங்களூர்ல வீட்டு வாடகையை ஏத்தனவங்க நிறைய பேர். ஆனா அவுங்க பேப்பர்ல கொடுத்த விளம்பரமும் கைல கொடுத்த காசும் கணக்கு பண்ணா மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்யாசம்.

இது மட்டுமில்லை. இந்தஹோட்டல் எல்லாம் அதுக்கு மேல. ஒரு சிக்கன் பிரியாணி அறுபது ரூபாய். சைட்டிஷ்எல்லாம் நூறுநூத்தியிருபது. இப்படி தான். ஒரு ட்ரீட்னு 5 பேரோட போனாஆயிரத்துல இருந்து இரெண்டாயிரம்வரைக்கும் தாராளமா செலவு ஆகும்.நம்மஆளுங்களுக்குவாரத்துக்கு ஒரு தடவைஇப்படி போயாகனும். ஆனா இருபத்தி அஞ்சு ரூபாய்க்கு கொடுத்த ஐட்டத்தையே அறுபது ரூபாய்க்கு ஏத்தனவங்க மேல ஏன் யாருக்குமே கோபம் வரல?

சாப்ட்வேர் இஞ்சினியர் இவ்வளவு சம்பாதிக்கிறானு சொல்றீங்களே. அவன்எவ்வளவு சேமிக்கிறானுயாருக்காவது தெரியுமா? ஒரு கிராமத்துல இருக்குற கவர்மெண்ட் பள்ளிக்கூட ஆசிரியர் சேமிக்கிறதைவிட கொஞ்சம் அதிகமா அவன்சேர்த்து வைக்கலாம். அவ்வளவு தான். அவனோட வாழ்க்கை முறைஅவனைஅதுக்கு மேல சேமிக்க விடறதில்லை. அதுலஅவன்தப்பு எதுவுமில்லைனு நான்சொல்லலை. ஆனா அவன்தப்பு மட்டுமேனு எல்லாரும் சொல்றது தான்கஷ்டமா இருக்கு.

இருபத்தியொரு வயசுல எப்படியோ படிச்சி முடிச்சிட்டுவரான். கேம்பஸ்ல வேலைகிடைச்சா பரவாயில்லை. ஆனா அப்படி கிடைக்கலைனா அந்தவேலைகிடைக்க அவன்படற கஷ்டம் வேற எந்ததுறைக்கும் குறைவானதில்லை. அப்படியே கஷ்டப்பட்டு வேலைக்கு போனவுடனே அவன்வாங்கற சம்பளம் அவனுக்கு ஒரு பெருமையையும், தலை கனத்தையும் தருது. நம்மஅப்பா இத்தனை வருஷம் கஷ்டப்பட்டு வாங்கறதைவிட அதிகசம்பளம் வாங்கறோம்னு ஒரு பெருமிதமும் (தெரியாமலே கொஞ்சம் கர்வமும் தானாவந்துடுது) வருது. ஆனா அவனுக்கு அந்தகாசோட அருமை அவ்வளவா தெரியாது என்பது தான்உண்மை. அதுவுமில்லாமஅந்தவயசும் அப்படி தான். ஜாலியா இருக்கனும். அவ்வளவு தான்.

ஆனா அந்தவயசுக்கே உரியஇரக்க குணமும் அவன்கிட்ட தாராளமா இருக்கும். சுனாமி வந்தப்ப காசைஅள்ளிக்கொடுத்தவங்க நிறைய பேர். அதே மாதிரி நிறைய பசங்களுக்கு படிக்க உதவிசெஞ்சவங்க நிறைய பேர்இருக்காங்க. நண்பர்களிடமிருந்து இந்தமாதிரி மெயில் வந்தா, அது உண்மைனு தெரிஞ்சா குறைஞ்சது ஆயிரம் ரூபாயாவது யோசிக்காம செய்யறவங்க நிறைய பேர். பத்து பேர்தங்கியிருக்குற இடத்துல ரெண்டு மூணுபேர்வேலைக்கு போனாஅடுத்து எல்லாருக்கும் வேலைகிடைக்கிற வரைக்கும் அந்தவேலைக்கு போற மூணுபேர்மொத்த வாடகையையும் சாப்பாட்டு செலவையும் ஏத்துக்குவாங்க. வேலைக்கு சேர்ந்தவுடனேஅந்தபசங்க எந்தஊருக்கு போவாங்கனு யாருக்கும் தெரியாது. இங்கயும் அவன்காசைஅதிகமா நேசிக்கறதில்லை.

சாப்ட்வேர் இஞ்சினியருங்க வாங்கற சம்பளமெல்லாம் மொத்தமா ரியல் எஸ்டேட்காரவங்ககிட்டயும், செல்போன்கம்பெனிகளிடமும், ஹோட்டல் ஓனருங்ககிட்டதான்போய்சேருது. கொஞ்சம் கொஞ்சம் தியேட்டர் ஓனருங்ககிட்டயும், ஏர் பஸ்காரங்கட்டயும் போய்சேருது. இன்னைக்கு நம்மபார்க்கிற ஏற்றத்தாழ்வுக்கு இது தான்முக்கிய காரணம். பணக்காரன் ரொம்ப பெரிய பணக்காரன் ஆகறதுக்கு இது தான்காரணம். இப்படி சாப்ட்வேர் இஞ்சினியருங்ககிட்ட வர பணம்மொத்தமாக வேற ஒரு கும்பலால் பெறப்படுகிறது.

இதை கண்டிப்பா சாப்ட்வேர் மக்களால சரி செய்ய முடியாது. அரசாங்கம் ஏதாவது செஞ்சாதான் உண்டு. நம்மஅரசியல்வாதிகள்ல நிறைய பேருக்கு இதை புரிய வைக்கவே ரொம்ப கஷ்டப்படனும். சரி அதி புத்திசாலிங்களான மன்மோகன் சிங்கும், பா.சிதம்பரமும் இதையெல்லாம் பத்தி ஏதாவது செய்யறாங்களானு தெரியல.

கார், Furnished 3 BHK (Bed Room, Hall, Kitchenஆம்), சிக்கன் பிரியாணி இதையெல்லாம் விட ஒரு டூ-வீலர், அப்பா, அம்மாவோட இருக்குற வீடு, அம்மா கைல சமைச்ச ரசம், துவையல் இதெல்லாம் தாங்க சொர்க்கம். பெருநகரங்களிலிருக்கும் சாப்ட்வேர் கம்பெனியெல்லாம் கொஞ்சம் சிறுநகரங்களுக்குகொண்டு வந்து பாதிசம்பளம் கொடுத்தாக்கூட போதும். நம்மஆளுங்க எல்லாம் ஓடி வந்துடுவாங்க. அதை விட்டுட்டு நீ எப்படி நாற்பதாயிரம்சம்பாதிக்கலாம்னு சண்டை போடறதோ, புலம்பறதோ சரியில்லைங்க.