Friday, November 2, 2007

சாப்ட்வேர் இஞ்சினியருங்க வாங்கற சம்பளமெல்லாம் !!!

கற்றது தமிழ் படம்பாக்கலைனாலும் அதை பற்றி படித்த விமர்சனங்கள்மென்பொருள் துறையினரை சாடுவதாக தெரிகிறது. இன்னைக்கு விலைவாசி ஏறனதுக்கு சாப்ட்வேர் இஞ்சினியர்கள் தான்காரணம்னு நிறைய பேர்சொல்லி கேட்டிருக்கேன். ஒரு வகைலஅது உண்மையும் கூட.

மெட்ராஸ்ல இருந்து திருச்சி போகறதுக்கு ஏர் பஸ்லபோகலாம்னு போய்விசாரிச்சிருக்கான். ஒரு சீட்தான்இருக்குனு சொல்லியிருக்காங்க. அதே சமயம் ஒரு சாப்ட்வேர் இஞ்சினியரும்அங்கவந்திருக்கான். உடனேபஸ் கண்டக்டர் (ஏர் பஸ்லஇருக்கறவர் பேருகண்சக்டரா இல்லை க்ளீனரா?) 100 ரூபாய் அதிகமா சொல்லியிருக்கான். உடனேஎன் அண்ணன் சாதாரண பஸ்லபோனாஅந்த100 ரூபாய்க்கு திருச்சிக்கேபோயிடலாம்னு ஏர் பஸ்லபோகாம சாதாரண பஸ்லயே போயிருக்கான். நம்மஆளு (சாப்ட்வேர் தான்) நூறுரூபாஅதிகமா செலவு பண்ணி ஏர் பஸ்லபோயிருக்கான்.

இந்த இடத்துல தப்பு யார்மேலனு எனக்கு தெரியல. ஏமாந்தவன் ஒருத்தன் வரான், நூறுரூபாய் ஏத்தி சொன்னாலும் சேர்த்து வாங்குவானு சொன்ன அந்தபஸ்காரன் மேல ஏங்கயாருமே தப்பு சொல்ல மாட்றீங்க? ஏமாத்தறவனைவிட ஏமாறவன் மேல ஏன் உங்களுக்கு எல்லாம் இந்தகோபம்? யாரும் விருப்பட்டு ஏமாறதில்லைங்க.

பெங்களூர்ல வீட்டு வாடகை ஏறிடுச்சினு எல்லாரும் சாப்ட்வேர் இஞ்சினியரை திட்றாங்க. ஆனா தலைக்கு ரெண்டாயிரம். நாலுபேர்தங்கினா எட்டாயிரம், இன்னொருத்தவன் வந்தா பத்தாயிரம்னுசொல்ற வீட்டு ஓனருங்க மேல ஏன் உங்ககோபம் போகலை? இன்ஃபோஸிஸ் இருபத்தைந்தாம் ஆண்டு விழாக்கு போனஸ்னு தராங்கனு சொன்னவுடனே பெங்களூர்ல வீட்டு வாடகையை ஏத்தனவங்க நிறைய பேர். ஆனா அவுங்க பேப்பர்ல கொடுத்த விளம்பரமும் கைல கொடுத்த காசும் கணக்கு பண்ணா மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்யாசம்.

இது மட்டுமில்லை. இந்தஹோட்டல் எல்லாம் அதுக்கு மேல. ஒரு சிக்கன் பிரியாணி அறுபது ரூபாய். சைட்டிஷ்எல்லாம் நூறுநூத்தியிருபது. இப்படி தான். ஒரு ட்ரீட்னு 5 பேரோட போனாஆயிரத்துல இருந்து இரெண்டாயிரம்வரைக்கும் தாராளமா செலவு ஆகும்.நம்மஆளுங்களுக்குவாரத்துக்கு ஒரு தடவைஇப்படி போயாகனும். ஆனா இருபத்தி அஞ்சு ரூபாய்க்கு கொடுத்த ஐட்டத்தையே அறுபது ரூபாய்க்கு ஏத்தனவங்க மேல ஏன் யாருக்குமே கோபம் வரல?

சாப்ட்வேர் இஞ்சினியர் இவ்வளவு சம்பாதிக்கிறானு சொல்றீங்களே. அவன்எவ்வளவு சேமிக்கிறானுயாருக்காவது தெரியுமா? ஒரு கிராமத்துல இருக்குற கவர்மெண்ட் பள்ளிக்கூட ஆசிரியர் சேமிக்கிறதைவிட கொஞ்சம் அதிகமா அவன்சேர்த்து வைக்கலாம். அவ்வளவு தான். அவனோட வாழ்க்கை முறைஅவனைஅதுக்கு மேல சேமிக்க விடறதில்லை. அதுலஅவன்தப்பு எதுவுமில்லைனு நான்சொல்லலை. ஆனா அவன்தப்பு மட்டுமேனு எல்லாரும் சொல்றது தான்கஷ்டமா இருக்கு.

இருபத்தியொரு வயசுல எப்படியோ படிச்சி முடிச்சிட்டுவரான். கேம்பஸ்ல வேலைகிடைச்சா பரவாயில்லை. ஆனா அப்படி கிடைக்கலைனா அந்தவேலைகிடைக்க அவன்படற கஷ்டம் வேற எந்ததுறைக்கும் குறைவானதில்லை. அப்படியே கஷ்டப்பட்டு வேலைக்கு போனவுடனே அவன்வாங்கற சம்பளம் அவனுக்கு ஒரு பெருமையையும், தலை கனத்தையும் தருது. நம்மஅப்பா இத்தனை வருஷம் கஷ்டப்பட்டு வாங்கறதைவிட அதிகசம்பளம் வாங்கறோம்னு ஒரு பெருமிதமும் (தெரியாமலே கொஞ்சம் கர்வமும் தானாவந்துடுது) வருது. ஆனா அவனுக்கு அந்தகாசோட அருமை அவ்வளவா தெரியாது என்பது தான்உண்மை. அதுவுமில்லாமஅந்தவயசும் அப்படி தான். ஜாலியா இருக்கனும். அவ்வளவு தான்.

ஆனா அந்தவயசுக்கே உரியஇரக்க குணமும் அவன்கிட்ட தாராளமா இருக்கும். சுனாமி வந்தப்ப காசைஅள்ளிக்கொடுத்தவங்க நிறைய பேர். அதே மாதிரி நிறைய பசங்களுக்கு படிக்க உதவிசெஞ்சவங்க நிறைய பேர்இருக்காங்க. நண்பர்களிடமிருந்து இந்தமாதிரி மெயில் வந்தா, அது உண்மைனு தெரிஞ்சா குறைஞ்சது ஆயிரம் ரூபாயாவது யோசிக்காம செய்யறவங்க நிறைய பேர். பத்து பேர்தங்கியிருக்குற இடத்துல ரெண்டு மூணுபேர்வேலைக்கு போனாஅடுத்து எல்லாருக்கும் வேலைகிடைக்கிற வரைக்கும் அந்தவேலைக்கு போற மூணுபேர்மொத்த வாடகையையும் சாப்பாட்டு செலவையும் ஏத்துக்குவாங்க. வேலைக்கு சேர்ந்தவுடனேஅந்தபசங்க எந்தஊருக்கு போவாங்கனு யாருக்கும் தெரியாது. இங்கயும் அவன்காசைஅதிகமா நேசிக்கறதில்லை.

சாப்ட்வேர் இஞ்சினியருங்க வாங்கற சம்பளமெல்லாம் மொத்தமா ரியல் எஸ்டேட்காரவங்ககிட்டயும், செல்போன்கம்பெனிகளிடமும், ஹோட்டல் ஓனருங்ககிட்டதான்போய்சேருது. கொஞ்சம் கொஞ்சம் தியேட்டர் ஓனருங்ககிட்டயும், ஏர் பஸ்காரங்கட்டயும் போய்சேருது. இன்னைக்கு நம்மபார்க்கிற ஏற்றத்தாழ்வுக்கு இது தான்முக்கிய காரணம். பணக்காரன் ரொம்ப பெரிய பணக்காரன் ஆகறதுக்கு இது தான்காரணம். இப்படி சாப்ட்வேர் இஞ்சினியருங்ககிட்ட வர பணம்மொத்தமாக வேற ஒரு கும்பலால் பெறப்படுகிறது.

இதை கண்டிப்பா சாப்ட்வேர் மக்களால சரி செய்ய முடியாது. அரசாங்கம் ஏதாவது செஞ்சாதான் உண்டு. நம்மஅரசியல்வாதிகள்ல நிறைய பேருக்கு இதை புரிய வைக்கவே ரொம்ப கஷ்டப்படனும். சரி அதி புத்திசாலிங்களான மன்மோகன் சிங்கும், பா.சிதம்பரமும் இதையெல்லாம் பத்தி ஏதாவது செய்யறாங்களானு தெரியல.

கார், Furnished 3 BHK (Bed Room, Hall, Kitchenஆம்), சிக்கன் பிரியாணி இதையெல்லாம் விட ஒரு டூ-வீலர், அப்பா, அம்மாவோட இருக்குற வீடு, அம்மா கைல சமைச்ச ரசம், துவையல் இதெல்லாம் தாங்க சொர்க்கம். பெருநகரங்களிலிருக்கும் சாப்ட்வேர் கம்பெனியெல்லாம் கொஞ்சம் சிறுநகரங்களுக்குகொண்டு வந்து பாதிசம்பளம் கொடுத்தாக்கூட போதும். நம்மஆளுங்க எல்லாம் ஓடி வந்துடுவாங்க. அதை விட்டுட்டு நீ எப்படி நாற்பதாயிரம்சம்பாதிக்கலாம்னு சண்டை போடறதோ, புலம்பறதோ சரியில்லைங்க.

1 comment:

Landless man said...

ஆட்டம் ஓவரா தெரியல